கஞ்சாவுக்காக அலைந்த பிளஸ்டூ மாணவி - வீடியோ வெளியிட்ட வாலிபர்

 
k

கஞ்சா எங்கே கிடைக்கும் என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி இருந்த பிளஸ் டூ மாணவிக்கு கஞ்சா எங்கு சென்றால் கிடைக்கும் என்பதையும் கஞ்சாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கேரள மாநிலத்தில் திருச்சூரைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி ஒருவர் தனக்கு கஞ்சா கிடைக்கவில்லை என்று ம், கஞ்சா எங்கே கிடைக்கிறது என்றும் கேட்டு சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.   அதற்கு ஒரு வாலிபர்  கோதமங்கலத்தில் கஞ்சா விற்கப்படுகிறது என்று சொல்லிவிட்டு,   கஞ்சாவை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று செயல் விளக்கம் கொடுத்து அதை வீடியோவாக பதிவு செய்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

k

 இருவரின் செயலுக்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன.   எர்ணாகுளம் மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார்கள் பறந்தன.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததுதில்,   அந்த வாலிபர் மட்டான்சேரி அருகே புத்தன்புரா  வீட்டைச் சேர்ந்த அகஸ்டின் என பதில்  வந்திருக்கிறது.   அவரை எர்ணாகுளம் கலால் பிரிவு போலீசார் கைது செய்து அவர் வீட்டில் சோதனை நடத்திய போது 3 கிராம் கஞ்சா சிக்கி இருக்கிறது.  அதை பறிமுதல் செய்த போலீசார் அகஸ்டினை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 அந்த வீடியோவை பார்த்து போலீசார்,  தவறான நோக்கத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.  சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். கஞ்சா கிடைக்கும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு முற்றிலும் முடக்கப்படும்.   இது போன்ற தவறான வழிகளை இளைஞர்கள், இளம்பெண்கள் பின்பற்றக் கூடாது என்று அறிவு இருக்கின்றது.