ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி..

 
Modi

இந்தியாவிலேயே  தயாரிக்கப்பட்ட முதல்  விமானம் தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் -ஐ   பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
 
இந்திய கடற்படையில் பணியாற்றிய, பிரிட்டனிடமிருந்து வாங்கப்பட்ட விக்ராந்த்,   விராட் ஆகிய இரண்டு போர்க் கப்பல்களும் ஓய்வு பெற்றுவிட்டன.   ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மட்டுமே தற்போது சேவைகள் இருந்து வருகிறது. 1971களில் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரின் போது முக்கிய பங்காற்றிய விக்ரம் கப்பலில் நினைவாக உள்நாட்டிலேயே தயாராகி இருக்கும் விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கும்  ஐ.என்.எஸ் விக்ராந்த் என  பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட போர்க்கப்பலின் தொடக்க விழா இன்று  கொச்சியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விக்ராந்த் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி..

 இந்த ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலானது   ரூ. 23,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நவீன போர்க்கப்பல்களில் ஒன்றான ஐஎன்எஸ் விக்ராந்தின் கட்டுமான பணிகள்,  கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கியது.   கடந்தாண்டு பணிகள் நிறைவு பெற்ற பின்னர் ,   4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன. 45 ஆயிரம் டன் எடை கோட்டை இந்த கப்பல் 15 தளங்கள் மற்றும் 2,500  பிரிவுகளைக் கொண்டுள்ளது.  ஐஎன்எஸ் விக்ராந்த்   262 மீட்டர் நீளம்,  62 மீட்டர் அகலம்   59 மீட்டர் உயரம் கொண்டதாகும். 

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி..

அத்துடன்  75 ஆயிரம் நாட் மைல்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் வல்லமை கொண்ட,  இந்த போர்க்கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட் ஆகும். மேலும்,  இதில் பெண் அதிகாரிகளுக்கு என தனித்தனி கேபின்கள் உள்ளன.  ஒரே நேரத்தில் இந்தக் கப்பலில் 1,700 பேர் பணியாற்றலாம். அதேபோல்,  மிக் 29கே போர் விமானங்கள் , கமோவ் 31 ஹெலிகாப்டர்கள், எம்.எச்-60 ஆர் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இந்தக் கப்பலில்  இயக்கவும் தரையிறக்கமும் முடியுமாம்.  அத்துடன்  30 விமானப்படை விமானங்களுடன் பயணிக்கும் வலிமை கொண்டது.  

 ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி..
அதுமட்டுமின்றி இந்தக் கப்பலில் 2அறுவை சிகிச்சை அறைகள்,  16 படுக்கைகள் , பரிசோதனை மையங்கள்,  சிடி ஸ்கேன் வசதி என மினி மருத்துவமனையை உள்ளது. மருத்துவப் பணிகளுக்காக மட்டும் ஐந்து மருத்துவ அதிகாரிகள் உட்பட 21 மருத்துவ பணியாளர்கள் பணியமடுத்தப்பட்டுள்ளனர்.   இதில் ஈபிள்  கோபுரம் கட்டுவதற்காக உபயோகிக்கப்பட்டுள்ள இரும்புகளை உடன் நான்கு மடங்கு இரும்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் , 2400 கிலோமீட்டர் அளவிற்கு நீளம் உள்ள கேபிள்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு நகரத்திற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறன் இந்த கப்பலுக்கு இருப்பதாகவும், நான்கு கேஸ் விசையாழிகள் மூலம் கப்பலுக்கு தேவையான 88 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.