பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திப்பு..

 
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திப்பு.. பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திப்பு..

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை,  இந்திய பிரதமர் மோடி  இன்று காணொலி வாயிலாக சந்திக்க உள்ளார்.  இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.  

 உக்ரைன்  மீது ரஷ்யா ஆக்ரோஷமாக போர் தொடுத்து வருவதால், அந்நாட்டுடனான வர்த்தக தொடர்புகளை பல்வேறு நாடுகள் நிறுத்தியுள்ளன. குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலிய எரிபொருட்களை வாங்க  வேண்டாம்  என இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.  அதேநேரம் ரஷ்யா குறைந்த விலையில் எரிபொருட்களை  வழங்குவதால்,  கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்திருக்கிறது.  இத்தகைய அரசியல் சூழலில்  இன்று பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் காணொலி வாயிலாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திப்பு..

 இரு நாட்டு கூட்டுறவுகளை வலுப்படுத்துவது,  சர்வதேச பிரச்சனைகள், தெற்கு ஆசியா, இந்தோ-பசிபிக் பகுதிகளில் அண்மையில் நடந்த நிகழ்வுகள் குறித்து,  பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட  இருதரப்பு பரஸ்பர நலன் சார்ந்த உலகளாவிய விடயங்கள் குறித்தும்  இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  காணொலி வாயிலாக நடைபெறும் இந்த சந்திப்பினால்   இரு நாடுகள் இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும்  மற்றும்  சர்வதேச நாடுகளிடையே வலுவான கூட்டணியை உருவாக்க உதவும் எனவும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திப்பு..

இருநாட்டு தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து  ,  இந்தியா-அமெரிக்க இடையே ‘டூ பிளஸ் டூ’ பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.   இந்திய தரப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க தரப்பில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்லாய்ட் ஆஸ்டின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் ஆகியோர் சந்திக்க உள்ளனர்.  உக்ரைன் பிரச்சனை, இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.