5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..

 
5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..

 அதிவேக இணையவசதியான 5ஜி  சேவையை,  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருக்கிறார் .

இந்தியாவை பொருத்தவரை தற்போது 4ஜி இன்டர்நெட் சேவை பழக்கத்தில் உள்ளது. அடுத்த கட்டமாக  அதிவேக இணையவசதியை அளிக்கும்  5ஜி சேவைக்கு கடந்த ஜூன் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  இந்த 5ஜி சேவை  தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் 4ஜி சேவையைவிட  10  மடங்கு அதிவேக  இன்டர்நெட் வசதியை கொடுக்கும் என கூறப்படுகிறது.

5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..

இதனையடுத்து கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில், ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடோஃபோன் ஜியோ , அதானி நிறுவனம் ஆகியவை பங்கேற்றன. ஏலத்தின் முடிவில்  1 கோடியே 50  லட்சத்து  173 கோடி  ரூபாய்க்கு  5ஜி அலைக்கற்றைகள் விற்பனையானத.   தொலை தொடர்பு துறையில் முன்னணியில்  இருக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவில் 5g அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்திருந்தது.

5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..

இந்நிலையில் இந்தியாவில்  5ஜி சேவையை  பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் இந்த சேவையை பிரதமர் அறிமுகப்படுத்தினார்.  முதல் கட்டமாக மும்பை,  டெல்லி,  சென்னை,  கொல்கத்தா,  அகமதாபாத் உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் படிப்படியாக இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்படும்.. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அனுராதாக்கூர் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் அம்பானி  உள்ளிட்ட ஏராளமானவர்கள்  பங்கேற்று உள்ளனர். ஓரிரு நாட்களில் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.