விவசாயிகளை கொன்றவருக்கு ஜாமீன்.. அரசு யாரை காப்பாற்றியிருக்கு?? பிரதமருக்கு அது இல்லையோ?? - பிரியங்கா காந்தி சாடல்..

 
பிரியங்கா காந்தி

லக்கிம்பூர் வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய  மத்திய அரசு முன்வராதடு ஏன் அன காங்கிரஸ் பொதுச்செயலாளார்  பிரியங்கா காந்தி  கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம்  நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக  போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர்  அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றினார்.

பிரியங்கா காந்தி

அப்போது நிகழ்விடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு ஏற்பட்ட வன்முறை  மேலும் 2 விவசாயிகள் உள்பட மொத்தமாக 8 பேர் உயிரிழந்தனர்.   இந்த விவகாரம் தொடர்பாக  மத்திய  அமைச்சர்  அஜய் மிஷ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா  உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த  கோர சம்பவம் நிகழ்ந்தபோதே, அஜய் மிஸ்ராவை பதவி விலகக்கோரி  காங்கிரஸ் உள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.  அதன்பிறகு ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற அலகாபாத் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

  முன்னதாக இந்த மனு மீதான உத்தரவு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,  நேற்று ( பிப் 10)  விசாரணையின்போது  நீதிபதி ராஜீவ் சிங் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளனர்.

பிரியங்கா காந்தி

அந்தவகையில் ராம்பூர் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “ லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியை பதவியில் இருந்து நீக்க மத்திய அரசு முன்வர மறுப்பது ஏன் ? என கேள்வியெழுப்பினார்.  பிரதமருக்கு  இந்த தேசத்தின் மீது தார்மீக பொறுப்பு இல்லையா?? பொறுப்பை நிறைவேற்றுவது அவரது கடமை இல்லையா என்றும் சாடிய  பிரியங்கா,   அதுதான் அனைத்து தர்மத்திற்கும் மேலானது என்று குறிப்பிட்டார்.

விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.  இனி அவன் வெளிப்படையாக சுற்றித்திரிவான் எனவும் , இதில் அரசு யாரை காப்பாற்றியிருக்கிறது ? விவசாயிகளையா ?  என சாடியுள்ளார். அதிகார பாதுகாப்பில் அமைச்சரின் மகன் விவசாயிகளை கார் ஏற்றி நசுக்கினார். ஆளும் கட்சியின் அதிகாரம் விவசாயிகளின் நீதிக்கான நம்பிக்கையை நசுக்கியுள்ளது.  நாடு முழுவதும் விவசாயிகள் வேதனையுடனும், கோபத்துடனும் இருப்பதாக பிரியங்கா  தெரிவித்தார்.  ஆனால் காங்கிரஸ் எப்போதும்  நீதியின் குரலை  நசுக்க விடாது என்று கூறினார்.