ஆப்கானில் கொல்லப்பட்ட புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் உள்பட 4 இந்தியர்களுக்கு ‘புலிட்சர் விருது’!

 
ஆப்கானில் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் உட்பட இந்தியர்கள் நால்வருக்கு புலிட்சர் விருது!

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் உள்பட 4 புகைப்படக் கலைஞர்களுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகளவில் ஊடகத்துறையில் சாதனைகள் புரியும் ஊடகவியலாளர்கள், புகைப்படக் கலைஞர்கள்,  இணைய ஊடகவியலாளர்கள் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்  'புலிட்சர் விருது'  வழங்கப்பட்டு வருகிறது.  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த விருதை  1917-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம்  வழங்கி கௌரவிக்கிறது.  சுமார் 21 பிரிவுகளில்  வழங்கப்படும் இந்த 'புலிட்சர் விருது' ஊடகத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. அந்தவகையில் 2022-ம் ஆண்டுக்கான புலிட்சர் விருதுபெறுவோர் பட்டியலை  கொலம்பியா பல்கலைக்கழகம் தற்போது அறிவித்திருக்கிறது.

 Pulitzer Prize

இந்த ஆண்டு   சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கான ‘புலிட்சர் விருது’ நான்கு இந்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில்  தாலிபன்கள் நடத்திய தாக்குதலின் போது  கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் நிறுவன  புகைப்பட கலைஞரான டேனிஷ் சித்திக் மற்றும் அவருடன் பணியாற்றிய மற்ற புகைப்பட கலைஞர்களான அட்னான் அபிடி, சன்னா இர்ஷாத் மட்டூ மற்றும் அமித் டேவ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட உள்ளது.  கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆப்கான் ராணுவத்துக்கும், தாலிபன்களுக்கும் இடையே நடந்த  மோதலை புகைப்படம் எடுப்பதற்காக டேனிஷ் சென்றிருந்தார். அப்போது தாலிபன்களின் தாக்குதலுக்கு இரையாகி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம்  சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின..

ஆப்கானில் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் உட்பட இந்தியர்கள் நால்வருக்கு புலிட்சர் விருது!

ஆப்கானிஸ்தான் தாக்குதல் மட்டுமின்றி, இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும்,  ஹாங்காங் போராட்டம், ஆசியாவில் நடபெற்ற ஏராளாமான முக்கிய நிகழ்வுகளை படமாக்கியிருக்கிறார்.  ராய்ட்டர்ஸ் பத்திரிக்கை நிறுவனத்தின் ஊழியரான  இவர்கள் எடுத்த புகைபடங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. 

ஆப்கானில் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் உட்பட இந்தியர்கள் நால்வருக்கு புலிட்சர் விருது!

கொரோனா பேரழிவை புகைப்படங்களில் வெளிச்சமிட்டுக் காட்டி,  அவை மக்களிடையே எளிதில் கடத்தும் வகையில் இருந்ததால் மிகப்பெரிய பேசுபொருளானது. இதன் மூலமே  சிறந்த புகைபடங்களுக்கான புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. மறைந்த புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்கிற்கு இது 2வது புலிட்சர் விருது..  ஏற்கனவே அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரோஹினியா வன்முறை  குறித்து எடுத்த புகைபடங்களுக்காக புலிட்சர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.