அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி

 
rahul

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். 

காங்கிரஸ்  கட்சி சார்பில் ஜவஹர்லால் நேரு காலத்தில்  நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பங்குகளை ,   சோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு  பங்குதாரர்களின் ஒப்புதலை  பெறாமல் மாற்றப்பட்டதாக புகார் எழுந்து. இதனையடுத்து  சோனிய மற்றும் ராகுல் காந்தி மீது  பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி,   டெல்லி  உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை தற்போது  அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜூன் 8ம் தேதியும், , முன்னாள் காங்கிரஸ் தலைவரும்,  மக்களவை தலைவருமான ராகுல் காந்தி ஜூன் 2ம் ஆம் தேதியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.    ஆனால் ராகுல் வெளிநாட்டில் இருந்ததால் வேறு தேதியில் ஆஜராவதாக அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி  ஜூன் 13 ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

rahul

இதனிடையே அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, ராகுல்காந்தி ஆஜராகும்போது நாடு முழுவதும் அமலாக்கதுறை அலுவலகத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி தலைமை அறிவுறுத்தி இருந்தது.இதனையடுத்து டெல்லி போலீசார் பேரணிக்கு அனுமதி மறுத்தனர். இந்நிலையில், டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முதல் ஏபிஜே அப்துல்கலாம் சாலை உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் வரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் பேரணியாக வந்த ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.   இதனிடையே அனுமதியின்றி பேரணி நடத்தியதோடு, அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு கூடிய காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.