அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்றும் ஆஜராகிறார் ராகுல் காந்தி

 
rahul


நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் நேற்று 9 மணி நேரத்திற்கு மேலாக அமலக்கத்துறை  விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவியது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. இந்த பத்திரிக்கையின் பங்குகளை ,   சோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு  பங்குதாரர்களின் ஒப்புதலை  பெறாமல் மாற்றப்பட்டதாக புகார் எழுந்து. இதனையடுத்து  சோனிய மற்றும் ராகுல் காந்தி மீது  பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி,   டெல்லி  உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை தற்போது  அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜூன் 8ம் தேதியும், , முன்னாள் காங்கிரஸ் தலைவரும்,  மக்களவை தலைவருமான ராகுல் காந்தி ஜூன் 2ம் ஆம் தேதியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.  சோனியா காந்திக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால் வருகிற 23ம் தேதி அஜராக உத்தரவிடப்பட்டது. இதேபோல் ராகுல் வெளிநாட்டில் இருந்ததால் வேறு தேதியில் ஆஜராவதாக அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி  ஜூன் 13 ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. 

rahul

இதனை தொடர்ந்து ராகுல் காந்தி நேற்று காலை 11 மணி அளவில் டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.  ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் அந்தஸ்திலான அதிகாரிகள் விசாரணை நடத்தி நடத்தினர். அப்போது சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் ராகுல் காந்தியிடம் இரவு 9.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. 
விசாரணையில் யங் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்ட விதம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை இயங்கிய விதம், காங்கிரஸ் கட்சி கொடுத்த நன்கொடை பங்குகள் மற்றும் யங் இந்தியா தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. யங்  இந்தியா நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக சொல்லப்படுவது பற்றி இந்த விசாரணை அமைந்திருக்கிறது. 

கிட்டத்தட்ட 9 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து ராகுல் காந்தி இன்று மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார். ராகுல் காந்தியிடன் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று டெல்லி முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்றும் போராட்டம் நடத்தப்படலாம் என கூறப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக, டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து அக்கட்சியின் எம்.பிக்கள், மூத்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், பி.எல்.புனியாவை  டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.