அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5வது நாளாக ராகுல் காந்தி ஆஜர்

 
rahul

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5வது நாளாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவியது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. இந்த பத்திரிக்கையின் பங்குகளை ,   சோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் உள்ள பங்குதாரர்களின் ஒப்புதலை  பெறாமல் மாற்றப்பட்டதாக புகார் எழுந்து. இதனையடுத்து  சோனிய மற்றும் ராகுல் காந்தி மீது  பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி,   டெல்லி  உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை தற்போது  அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராக்குல் காந்தி ஜூன் 13 ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.   3 நாட்களாக 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நான்காவது நாளாக நேற்றும் விசாரணைக்கு ஆஜரானார். 

rahul gandhi

இதுவரை 4 நாட்களாக 40 மணி நேரத்திற்கும் மேலாக ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்றும் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்க்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனை தொடர்ந்து, 5வது நாளாக ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.  அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். யங் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்ட விதம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை இயங்கிய விதம், காங்கிரஸ் கட்சி கொடுத்த நன்கொடை பங்குகள் மற்றும் யங் இந்தியா தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.