ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!!

 
tn

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கு இம்மாதம்  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிகிறது.

கொரோனா காரணமாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு இன்னும் விசாரிக்க படாமல் உள்ளது.  இரண்டு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாக பட்டியலிடப்படும் விசாரிக்கப்படவில்லை.  எனவே வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் கோரியுள்ளது.  பல வழக்குகள் கொரோனாவால் நிலுவையில் உள்ள நிலையில் விரைவில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்!

அந்த வகையில்  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்த வழக்கு ,  இம்மாதம் 15ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவும், அதை பராமரிக்கவும்,  அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.  இதன் அடிப்படையில் நீதிபதி சந்திரசூட் வருகிற 15-ஆம் தேதி இந்த வழக்கை  விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

supreme court

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பல பின்னணிகளை கொண்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில்  13 பேர் கொல்லப்பட்டனர்.  சுற்றுச் சூழலுக்கு எதிராக மாசு ஏற்படுத்தும் இந்த ஆலையின் செயல்பாடுகளுக்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவித்த நிலையில்,  ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.  இருப்பினும் கொரோனா காலத்தின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை ஆலையில்   ஆக்சிஜன் உற்பத்தியை செய்து தேவையான மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறோம் என உறுதி அளித்தது.  இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  கொரோனா கால  தேவைக்காக மட்டும் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜனை தயாரிக்க, ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது . அதே சமயம் தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்திய பிறகு இந்த ஆலையை திறக்க நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி ஆலை திறக்கப்பட்டு, ஆக்சிஜன் தேவை முடிந்ததும் மீண்டும் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.