கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் உறுப்புகள் விற்பனை

 
நரபலி

கேரளாவில் நரபலி ஆன இரண்டு பெண்களின் சடலங்களில் இருந்து முக்கிய உறுப்புகள் மாயமாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சைக்கோ.. 56 பீஸ்.. ஆபாச வீடியோ.. கேரளாவில் நரபலி நடந்தது எப்படி? வழக்கை  புரட்டி போட்ட "அந்த" காட்சி! | 56 body pieces, Raw human flesh feast, Adult  Video: Chilling facts about ...

கேரள நரபலி சம்பவத்தில் தோண்ட தோண்ட புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நரபலி கொடுக்கப்பட்ட  இரண்டு  பெண்களின் முக்கிய உடல் உறுப்புகளை பெங்களூரு கும்பலுக்கு விற்பனை செய்ய திட்டமிட்ட சாமியார் அவற்றை பத்திரப்படுத்தும்படி  பகவல்சிங் தம்பதிகளை கட்டாயப்படுத்தியது தெரியவந்துள்ளது.


கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்துக்கு உட்பட்ட எலந்தூர் இரட்டை நரபலி சம்பவத்தில்  கைதான சாமியார் ஷபி, வைத்தியர் பகவல்சிங் அவரதுமனைவி ஆகியோரை காவலில் எடுத்துள்ள போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நரபலி நடந்த வீட்டுக்கு மூவரையும் நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது தருமபுரி பெண் பத்மா மற்றும்  ரோஸ்லியை நரபலி  கொடுத்தது எப்படி என்பது குறித்து நடித்து காட்டினர்.

நரபலிக்கு பின்பு  இரண்டு பெண்களின் சடலங்களையும் கூறுபோட்டதோடு,  10 கிலோ மனித மாமிசத்தை  பிரிட்ஜில் பத்திரப்படுத்தியதாகவும், அவற்றை குக்கரில் வேகவைத்து சாப்பிட்டதாகவும் வாக்குமூலம்அளித்தனர். எஞ்சியவற்றை,  எரித்து அழித்தாகவும்  கூறினர். மனித மாமிசத்தை  வேக வைக்க பயன்படுத்திய குக்கர்,  4 கூர்மையான கத்திகள், இரண்டு மடக்கட்டைகள்,  இரண்டு  மலையாள மாந்ரீக புத்தகங்கள்,   மனித உடற்பாகங்களில் சில ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

தருமபுரி பெண் பத்மாவின் சடலத்தை 56 துண்டுகளாக வெட்டியதாகவும், கேரள பெண்  ரோஸ்லியின் சடலத்தை 5 துண்டுகளாக வெட்டி புதைத்தாகவும் கூறினர்.  அதன்படி கூறுபோடபட்ட பெண்களின் உடல் பாகங்களை மீட்ட போலீசார் அவற்றை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தவிர மேலும் சடலங்கள்  புதைக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்டறிய மனிதர்களை தேடுவதல் நன்கு பயிற்சி பெற்ற இரண்டு மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் இரண்டு பெண்களின் சடலங்களில் இருந்தும் முக்கிய உடல் உறுப்புகள் மாயமாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து பகவல்சிங், அவரது மனைவி ஆகியோரிடம் விசாரித்தனர்.

கேரள நரபலி: தோட்டம் முழுவதும் 56 உடல் பாகங்கள், 5 எலும்புக்கூடு துண்டுகள் -  பிபிசி தமிழ் கள நிலவரம் - BBC News தமிழ்

அப்போது  வேகவைக்கப்பட்ட மனித மாமிசத்தை பகவல்சிங் மற்றும் சாமியார் ஷபி ஆகியோர் சாப்பிட்டதாகவும், லைலா சாப்பிடவில்லை எனவும் கூறினர். மேலும் முக்கிய உடல் உறுப்புகளை எடுத்து  பத்திரப்படுத்தும்படி  சாமியார் ஷபி கூறியதாகவும், அவற்றை  வெளிச்சந்தையில் நல்ல விலைக்கு விற்கலாம் என்றும் , உள் உடல் உறுப்புகளை வாங்க பெங்களூருவில் இருந்து ஆட்கள் வருவார்கள் என்றும் சாமியார் ஷபி கூறியதாக பகவல்சிங், லைலா ஆகியோர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.  நரபலிகொடுக்கப்பட்டவர்களின் உள்உறுப்புகள் சிலவற்றை எடுத்த பின்பு அவற்றை குழியில் வீசி விட்டதாகவும்  அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

நரபலி கொடுக்கப்பட்டவர்களின் சடலங்களை கூறுபோட்ட விதமும் உடற்கூறு வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக பத்மாவின் சடலம் 56 துண்டுகளாக வெட்டப்பட்டு உள்ளது. அவை வெட்டப்பட்ட விதம்  அறிவியல் பூர்வமாக உள்ளது. எலும்பு மூட்டுகளை எப்படி வெட்டினால் உடல் பாகங்களை எளிதில் பிரிக்க முடியும் என்பதை அறிந்து செய்து உள்ளனர். மனித உடலின் உடற்கூறியல் தெரிந்தவர்களால் மட்டுமே இப்படி குழப்பம் இல்லாமல் செய்ய முடியும் என்று  உடற்கூறு வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். பகவல்சிங் அவரது மனைவி ஆகியோருக்கு இத்தகைய   தொழில் நுட்பம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் கருதுகின்றனர். எனவே  சடலங்களை கூறுபோட்டதில் சாமியார் ஷபி தவிர வேறு யாரேனும் இருந்திருப்பார்களா என்ற  சந்தேகமும் எழுந்து உள்ளது.