ஒற்றுமைக்கான நடைபயணத்தில் இணைந்த சோனியா காந்தி.. காரில் வாங்கம்மா என பாசம் காட்டிய ராகுல்..

 
ஒற்றுமைக்கான நடைபயணத்தில் இணைந்த சோனியா காந்தி..   காரில் வாங்கம்மா என பாசம் காட்டிய  ராகுல்..


கர்நாடகாவில் ராகுல் காந்தி நடத்திவரும் ஒற்றுமைக்கான  இந்திய நடைப்பயணத்தில்  சோனியா காந்தியும் பங்கேற்று உள்ளார்.  

கன்னியாகுமரியில்  கடந்த மாதம் 7ம் தேதி தனது நடைபயணத்தை தொடங்கிய  ராகுல் காந்தி,  கேரளாவை கடந்து தற்போது கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.  கர்நாடகாவில் 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் ராகுலின் நடைபயணம்,  காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக  மைசூரில் தனது நடை பயணத்தை முடித்துக் கொண்ட  ராகுல்காந்தி தசரா பண்டிகையை முன்னிட்டு,  இரண்டு நாட்கள் இடைவேளை எடுத்துக் கொண்டார்.

ஒற்றுமைக்கான நடைபயணத்தில் இணைந்த சோனியா காந்தி..   காரில் வாங்கம்மா என பாசம் காட்டிய  ராகுல்..

இந்நிலையில் இன்று  மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகே உள்ள கிராமத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கினார்.  29 வது நாளாக நடை பயணம் மேற்கொள்ளும் அவருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இணைந்துள்ளார்.  ஒற்றுமை யாத்திரையில் சோனியா காந்தி இன்று கலந்துகொண்டு சில  கிலோ மீட்டர் தூரம்  நடந்த பிறகு,   தொடர்ந்து நடக்க வேண்டாம் காரில் வாருங்கள் என தன் தாயாரை ராகுல்காந்தி காரில் ஏற்றிவிட்டு தன் நடை பயணத்தை தொடர்ந்தார்.  தொடர்ந்து நடப்பதாக சோனியாக காந்தி கூறியும் ராகுல் காந்தி அதை ஏற்க வில்லை.  இந்த நடைபயணத்தில் சோனியா காந்தி உடன் பிரியங்கா காந்தியும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கர்நாடகாவில் மட்டும் ராகுல்காந்தி 22 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.