கேரளாவில் 3 நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்!!

 
rain

கேரளாவில் 3 நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தென்மேற்கு பருவமழை விவசாயத்திற்கு முக்கிய முக்கியமான ஒன்றாக ஒன்றாக பார்க்கப்படுகிறது.  இந்த பருவமழை மந்தமாக தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு தெரிவித்தது.  கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்த நிலையில்,  இது மேலும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Rain

இந்நிலையில் கேரளாவில் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக கேரளா மற்றும் லட்சத்தீவுகள் இலேசான மழை இருக்கும். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ,தமிழ்நாடு ,புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் தாக்கம் பரவலாக மழையை ஏற்படுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.