பாம்பு கடித்து இறந்த மகன் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை

 
a

பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மகனின் உடலை ஏற்றிச்செல்ல ஆம்புலன்ஸ் வர மறுத்து விட்டதால் தோளிலேயே சுமந்து சென்றிருக்கிறார் தந்தை.

 திருப்பதி மாவட்டத்தில் காளகஸ்தி அருகே நடந்திருக்கிறது இந்த சம்பவம்.   ஆந்திராவில் திருப்பதி மாவட்டம் காளகஸ்தி அடுத்த திகுவபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செஞ்சய்யா.  விவசாயியான இவரது மகன் பசவயா.   ஏழு வயதான சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.   தங்களது நிலத்திலேயே வீடு கட்டி வசித்து வருகிறார் செஞ்சய்யா.  

bj

 இந்நிலையில் நேற்று காலை ஆறு மணி அளவில் செஞ்சய்யாவும் குடும்பத்தினரும் நிலத்தில் விவசாய வேலைகள் செய்து கொண்டிருந்திருக்கிறார்கள்.   அப்போது சிறுவன் பசவயா வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.  அப்போது வயல்வெளியில் இருந்த பாம்பு வந்து சிறுவனை கடித்து இருக்கிறது.

 பாம்பு கடித்ததும் சிறுவன் கதறி இருக்கிறான்.   உடனே அவனை சிகிச்சைக்காக கே.வி.பி. புரம் முதன்மை சுகாதார மையத்துக்கு  தூக்கிச் சென்றிருக்கிறார் செஞ்சய்யா.   

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறான் சிறுவன்.    மகனை உடலை ஊருக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடியிருக்கிறார் செஞ்சய்யா.  ஆனால் ஆம்புலன்ஸ் சிறுவனின் உடலை ஏற்றி செல்ல மறுத்து விட்டனர் .  ஆட்டோ உள்ளிட்ட வாகன டிரைவர்களும் மறுத்து உள்ளார்கள். இதனால் வேறு வழி இல்லாமல் தன் மகன் உடலை தனது தோழிலேயே சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்று இருக்கிறார் செஞ்சய்யா. 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் வளைத்தளங்களில் வைரலாகி பலரும் ஆம்புலன்ஸ் வர மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   தந்தை செஞ்சய்யாவுக்கு நிகழ்ந்த இந்த சோகம் வேறு யாருக்கும் நிகழக் கூடாது என்று பதிவிட்டு வருகின்றனர்.