#BREAKING எல்.ஐ.சி பங்குகளை விற்றதன் மூலம் அரசுக்கு ₹21,000 கோடி வருமானம்!!

 
ttn

எல்ஐசி பங்குகளை விற்றதன் மூலம் அரசுக்கு ரூ. 21,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

LIC
245 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நாட்டுடமையாக்கப்பட்ட 1956ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி எல்ஐசி உருவானது. அரசு நிறுவனங்கள் மீது வைத்த நம்பிக்கையை எல்ஐசி காப்பாற்றி இன்றளவும் சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. எல்ஐசி பங்கு விற்பனை என்பது சுதந்திர இந்தியாவில் நடந்தேறும் மிகப்பெரிய பங்கு விற்பனை.சிறு அளவிலான பங்குகளை விற்பதில்  எந்த மாற்றமும் ஏற்படாது என்று அரசு தரப்பில் கூறப்படும் நிலையில் எல்ஐசி பங்கு விற்பனை என்பது தனியார்மயம் நோக்கிய முதல் படி என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. வங்கி பொது காப்பீட்டு துறை குறித்த உண்மையை தனியார் அமைப்புகள் இதை உறுதி செய்கின்றன என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.  பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் ஒரு லட்சம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.  எல்சிஐ  பங்கு விற்பனையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், அதன் விளைச்சல் முழுவதும் இந்த நாட்டிலுள்ள வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கு மட்டுமே பயன்பட வழிவகுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

எல்ஐசி

இந்நிலையில் எல்ஐசி பங்குகளை விற்றதன் மூலம் அரசுக்கு ரூ. 21,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. தற்போது ரூ. 900 என்ற அளவில் பங்கு சந்தையில் வர்த்தகம் ஆகிவருகிறது. எல்ஐசி பங்குகள் சென்செக்ஸ் 750 புள்ளிகள் உயர்ந்துள்ள நிலையில் எல்ஐசி பங்கு விலை உயராததால்  முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எல்ஐசி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு 42 ஆயிரத்து 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  ரூபாய் 6 லட்சம் கோடியாக மதிப்பிட்டு இருந்த எல்ஐசியின் சந்தை மதிப்பு ரூபாய் 5.57 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது.