300 பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன் - சைபர் கிரைமிடம் சிக்கினான்

 
rr

திருமணம் செய்து கொள்வதாக 300-க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கிறார் நைஜீரிய வாலிபர்.  தன்னை வெளிநாடு வாழ் இந்தியர் என்று சொல்லிக்கொண்டு டெல்லியில் தங்கி இருந்து இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார். அவரை சைபர் கிரைம் போலீசார் பிடித்துள்ளனர்.

 நைஜீரியாவில் லகோஸ் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் கருபா கலும்ஜே.   38 வயதான இந்த வாலிபர் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆறு மாத விசாவில் தொழில் முறை பயணமாக இந்தியா வந்திருக்கிறார்.   டெல்லியில் தங்கிய கருபா,   தன்னை வெளிநாட்டு வாழ் இந்தியர் என்று சொல்லிக்கொண்டு இணையதளத்தில் விளம்பரப் படுத்தி இருக்கிறார். 

 தனது பெயர் சஞ்சய் என்றும்,  கனடாவில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர் என்று சொல்லியிருக்கிறார்.   தனக்கு நல்ல மணப்பெண் தேடி வருவதாக பல பெண்களிடம் போலியாக பேசி பணம் பறித்திருக்கிறார்.  இப்படி அவர் 300-க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. 

gg

 திருமண விளம்பரங்களுக்காக  ஸ்மார்ட்டாக இருக்கும் இந்திய ஆண்களின் புகைப்படங்களை புரொபைல் பிக்சராக பயன்படுத்தி இருந்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.   இவரால் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீரட் பகுதியைச் சேர்ந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி 60 லட்சம் ரூபாய் வரைக்கும் பணம் பறித்து விட்டார்  நைஜீரிய குடிமகன் என்று போலீசில் புகார் அளிக்க,  சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்ததில் அந்தப்பெண்ணை மோசடி செய்தது கருபா என்பதை கண்டறிந்தனர்.

 இதையடுத்து டெல்லியில் கிசான் கர் பகுதியில் தங்கியிருந்த கருபாபை கைது செய்தனர்.  அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.  அவரிடம் இந்தியாவில் தற்போது வசிப்பதற்கு உரிய ஆவணங்களை இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.  விசா காலத்தையும் மீறி தான் அவர் இந்தியாவில் தங்கி இருந்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. 

 கருபாவிடம் இருந்த 7 செல்போன்கள் மற்றும் பேங்காக், தாய்லாந்து, துபாய் இன்டர்போல், அமெரிக்க உள்துறை அமைச்சகம், அமெரிக்க உளவுத் துறை ஆகியவற்றின் பேரில் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன .

மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு  அவரை கைது செய்து உள்ள சைபர் கிரைம் போலீசார்,  இது மாதிரியான மோசடி பேர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.