இந்த கோர விபத்து நெஞ்சை உலுக்குகிறது - பிரதமர் மோடி

 
om

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பேருந்து விபத்து நெஞ்சை உலுக்குகிறது என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.

bus

 உத்தரகாண்ட் மாநிலத்தில் லால் தாங் பகுதியில் இருந்து பவுரி மாவட்டம் பிரோன் கால் பகுதிக்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 50க்கும் மேற்பட்டோர் பேருந்தில் நேற்று இரவு பயணித்துள்ளனர்.   மலைப்பகுதியில் இரவு ஏழு முப்பது மணி அளவில் பேருந்து சென்று கொண்டு இருந்திருக்கிறது .  சிம்ரி என்கிற இடத்தில் வளைவில் திரும்பும் போது பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.


 இந்த பயங்கர விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்கள், போலீசார், மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர் .  மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் படி அம் மாநில முதல்வர் புஸ்கர் தாமியும் உத்தரவிட்டிருந்தார்.   பயணித்த 50 பேரில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  மேலும் பள்ளத்தாக்கில் இருந்து 21 பேரை மீட்பு படையினர் மீட்டுள்ளார்கள்.

இ.ந்த விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.  திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் சென்றவர்களில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலம் பவுரியில் நடந்த பேருந்து விபத்து நெஞ்சை உலுக்குகிறது என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த துயரமான நேரத்தில்  உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கிறார்.