மன் கி பாத் நிகழ்ச்சியில் யோசனை .. மக்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி..

 
modi modi

மன் கி பாத் நிழ்ச்சியின் 91-வது எபிசோடுக்கு யோசனைகள் வழங்கும்படி பிரதமர் மோடி  மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.  

பிரதமர் மோடி மாதம்தோறும்  தனது வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம், நாட்டு மக்களிடையே  உரையாற்றி  வருகிறார்.    அந்தவகையில்  ஜூலை 31-ம் தேதி நடைபெற உள்ள  மன் கி பாத் நிகழ்ச்சியின்   91-வது எபிசோடில் மக்கள் தங்கள் யோசனைகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.  கருத்துகளை MyGov மற்றும் NaMo Appல் பகிரலாம் எனவும், அல்லது 1800-11-7800 என்ற எண்ணை டயல் செய்தும் மக்கள் தங்களின்  ஆலோசனைகளை  பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

modi

இதுகுறித்து  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, " இந்த மாதத்தின் மன் கி பாத் 31-ம் தேதி நடைபெற உள்ளதா ? அவற்றைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.  MyGov அல்லது NaMo App இல் உங்கள் கருத்துகளை பகிரவும். 1800-11-7800 ஐ டயல் செய்து உங்கள் யோசனைகளைப் பதிவு செய்யவும்" என்று  குறிப்பிட்டுள்ளார்.  

modi

அதேபோல் இந்நிகழ்ச்சி குறித்து  MyGov ஆப் சார்பில் , “ வரவிருக்கும் மன் கி பாத் எபிசோடில் பிரதமர் பேச விரும்பும் கருப்பொருள்கள் அல்லது சிக்கல்கள் குறித்து உங்கள் ஆலோசனைகளை எங்களுக்கு அனுப்பவும். இந்த திறந்த மன்றத்தில் உங்கள் கருத்துக்களைப் பகிரவும். அல்லது அதற்கு மாற்றாக 1800-11-7800 என்ற கட்டணமில்லா எண்ணையும் டயல் செய்யலாம். பிரதமருக்கான உங்கள் செய்தியை இந்தி அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்யுங்கள். பதிவு செய்யப்பட்ட சில கருத்துகள் ஒளிபரப்பின் ஒரு பகுதியாக மாறக்கூடும்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது,