திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட் - 3 இடங்களில் கிடைக்க ஏற்பாடு!!

 
tirupathi

கொரோனா குறைந்து வருவதால் திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது. காலை 9 மணிமுதல் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

tirupathi

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏழுமலையானை வழிபடுவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை ஆன்லைன் மூலமாக வெளியிடப்பட்ட வந்தது . தற்போது கொரோனா குறைந்து வருவதை கருத்தில் கொண்டு நேரடியாக கவுண்டர்களில் இலவச டிக்கெட் வழங்க தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.

tirupati

இந்நிலையில் நாளை முதல் நாள் ஒன்றுக்கு 10,000 என்ற எண்ணிக்கையில் திருப்பதியில் உள்ள சீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ,அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய மூன்று இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . பக்தர்கள் ஆதாரங்களை சமர்ப்பித்து டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  ஆன்லைனில் டிக்கெட் விற்பனை என்பது சில மணி நேரங்களில் முடிந்து விடுவதால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் . அத்துடன் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு பக்தர்கள் நேரடியாக திருப்பதி ஏழுமலையானை வந்து தரிசனம் செய்து விட்டு,பிறகு தங்கள் ஊருக்கு சென்று விடுகின்றனர்.  

tirupathi

இதனால் கீழ் திருப்பதி என்று சொல்லப்படும் இடத்தில் ஹோட்டல், டாக்ஸி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்துபவர்கள் பாதிக்கப்படுகின்றனர், அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டே தற்போது நேரடியாக இலவச  டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இருப்பினும் பக்தர்கள்  கண்டிப்பாக 2 டோஸ்  செலுத்தி இருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட் ட கொரோனா இல்லை என்ற சான்றிதழை உடன் கொண்டு வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.