மத்திய பட்ஜெட் - டெல்லியில் அல்வா தயாரிக்கும் நிகழ்வு

ஒவ்வொரு ஆண்டும் நிதி பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, மரபுப்படி அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மத்திய பட்ஜெட் 2023 பிப்ரவரி 1, 2023 அன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய பட்ஜெட் தயாரிப்பு நிறைவை குறிக்கும் வகையில் அல்வா தயாரிக்கும் சம்பிரதாய நிகழ்வு நடைபெற்றது. அல்வா தயாரிக்கும் நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பகவத் கிஷன்ராவ் கரத் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.
மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் பட்ஜெட் தயாரிக்கும் பணி நிறைவடைந்து ஆவணமாக தொகுக்கும் பணி தொடங்கவுள்ளது. பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா தயாரித்து வழங்கினார். இந்நிகழ்வுக்கு பின்னர் பட்ஜெட் ஆவணங்கள் வழக்கமாக அச்சிடப்படும், ஆனால் 2021 இல் கோவிட்-19 தொற்றுநோய் பட்ஜெட் காரணமாக பட்ஜெட் காகிதமற்றதாக மாறியபோது செயல்முறை மாறியது.