#Breaking மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்ப ஒன்றிய அரசு தடை!

 
ttn

கல்வி தொலைக்காட்சி (Education TV) என்பது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டுள்ள ஒரு அலைவரிசை ஆகும். இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் நாள் முதல் ஒளிபரப்பப்படுகிறது. இத்தொலைக்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள், வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் கற்றல் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்களின் கலந்துரையாடல்கள், நுழைவுத் தேர்வு குறித்த விளக்கங்கள் புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், கல்வி உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகள், பாட வல்லுனர்கள் நடத்தும் சிறப்பு வகுப்புகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ள மேலும் சில நிகழ்ச்சிகள் ஆகும்.

central

இந்நிலையில் மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.  ஏற்கனவே ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.  இந்த அறிவிப்பால் தமிழ்நாடு அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. 

ttn

மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் தடைவிதித்து ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள உத்தரவால் தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளது.