நாங்கள் பெருமைப்படுகிறோம்- மருமகன் ரிஷியால் நெகிழும் இன்போசிஸ் நாராயண மூர்த்தி

 
na

மருமகன் என்கிற முறையில்  இங்கிலாந்து பிரதமராக பதவியேற்கும்  ரிஷி சுனக்கினை வாழ்த்தி இருக்கிறார் மாமனார் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்,  இங்கிலாந்தின் பிரதமராக போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார்.   இங்கிலாந்தின் 57 வது பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் 42வயது நிரம்பிய நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.

 ரிஷி சுனக்கிற்கும் இந்தியாவிற்கும் உள்ள நெருக்கம் ஏராளம்.  பெற்றோர்  இருவருமே இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள்.   பெற்றோர் வழி தாத்தாக்கள் இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள்.   இந்தியாவை பூர்விகமாக கொண்ட ரிஷி சுனக்கின் பெற்றோர்கள் இருவரும் 1960 ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.

r

 இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா  மூர்த்தியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.  கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.   இத்தம்பதிக்கு கிருஷ்ண,  அனுஷ்கா என்று இரு மகள்கள் உள்ளனர்.  ரிஷி சுனக் தனது மனைவி,  குழந்தைகளுடன் அடிக்கடி பெங்களூருக்கு வந்து செல்வது வழக்கம் .

மருகன ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் நெகிழ்ந்து போயிருக்கிறார் நாராயண மூர்த்தி.  இது குறித்து அவர்,  ‘’ரிஷிக்கு எனது வாழ்த்துக்கள்.  அவர் இங்கிலாந்து பிரதமர் ஆவதால் நாங்கள் பெருமை அடைகிறோம்.  அவர் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம் . அவர் நிச்சயம் இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு நல்லதை செய்வார்’’ என்று கூறியிருக்கிறார்.