சைகோவ்- டி தடுப்பூசி விநியோகம் இந்தியாவில் தொடங்கியது - சைடஸ் நிறுவனம் அறிவிப்பு..

 
zycov d

இந்தியாவில் சைகோவ் - டி கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டு விட்டதாக சைடஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம்  முழுவதும் கொரோனா கோரப்பிடியில் இருந்து விடுவித்துக்கொள்ள  தடுப்பூசியை  பேராயுதமாக பயன்படுத்தி வருகிறது.  இந்தியாவை பொறுத்தவரை    ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பையோடெக் நிறுவத்தின் கோவாக்சின்  மற்றும் பூனே சீரம்  நிறுவனத்தின்  கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது  'சைடஸ் கேடிலா' நிறுவனதின் சைகோவ்-டி தடுப்பூசியின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.

zycov d

அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்  சைடஸ் நிறுவனம்,  தற்போது இந்திய அரசுக்கு கொரோனா  தடுப்பூசி விநியோகிப்பதாகவும், விரைவில் தனியாருக்கும் விநியோத்தை தொடங்க   திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின்  சைகோவ்-டி தடுப்பூசி அவசரக்கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.

zycov d

 இந்த சைகோவ் - டி   தடுப்பூசி உலகின் முதல் பிளாஸ்மிட் டி.என்.ஏ வகை தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசியை 3 தவணைகளாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சைகோவ் - டி  கொரோனா தடுப்பு மருந்தின்  ஒரு தவணை தடுப்பூசியின் விலை ரூ.358-ஆகவும், 3 தவணை தடுப்பூசியையும் சேர்த்து இதன் விலை ரூ.1074-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.