தமிழகத்தை போல புதுச்சேரியிலும் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம்!!

 
puducherry

புதுவையில் பெண்களுக்காக இலவச பேருந்து இயக்கப்படும்  என்று அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.

ttn

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டது . இது மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் தினம் தோறும் இலவசமாக பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பெண்களுக்கான இலவச பயணமும் புதுச்சேரியில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

bus

இந்நிலையில் புதுச்சேரியில் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு என பிரத்தியேகமாக பிங்க் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.  அது முழுக்க முழுக்க தமிழகத்தைப் போல் இலவச பேருந்து இயக்கப்படும் என்றும் நவீன வசதியுடன் பெண்களுக்காக 200 இலவசப் பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தகவல் தெரிவித்துள்ளார். புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் இந்த அறிவிப்பு அம்மாநில பெண்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.