அரசுப் பேருந்தின் ஜன்னலில் சிக்கிய பயணியின் தலை
அரசு பஸ்சின் ஜன்னல் ஓர கண்ணாடியில் சிக்கி கொண்ட பயணியின் தலையை சுமார் அரை மணி நேரப்போராட்டத்துக்கு பின்னர் சக பயணிகள் போராடி மீட்டனர்.
பேருந்து பயணத்தின் போது ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பயணிகள், குழந்தைகள், யாரும் ஜன்னலுக்கு வெளியே தலை, கையை வெளியே நீட்ட வேண்டாம் என எச்சரிப்பது வழக்கம். ஆனால், சிலர் அந்த எச்சரிக்கையை புறக்கணித்து அவ்வாது வைத்து வருவார்கள். அதேபோல் நேற்று ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நௌபாடாவில் இருந்து தெக்கலி நோக்கி ஆர்டிசி பேருந்து சென்றது. இந்த பேருந்தில் பயணம் செய்த ஒருவர் பேருந்தில் ஏறியவுடன் பிக்சிட் ஜன்னல் கண்ணாடி ஓரம் அமர்ந்து ஜன்னலில் தலையை வைத்து வெளியே பார்த்தார். அவ்வளவுதான் அவர் தலையை மீண்டும் வெளியே எடுக்க முடியாமல் அவதிப்பட்டார்.
Watch | ஆந்திரா: குண்டூர் மாவட்டம் நௌபாடாவில் இருந்து தெக்கலி நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் ஜன்னலில் சிக்கிய பயணியின் தலை.. 20 நிமிடங்கள் போராடி மீட்ட சக பயணிகள்!#SunNews | #AndhraPradesh pic.twitter.com/vVCUtI4qde
— Sun News (@sunnewstamil) January 24, 2024
உடனடியாக டிரைவர் உட்பட பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் சேர்ந்து போராடி ஜன்னலில் இருந்து அவரது தலையை பத்திரமாக எடுத்தனர். இதனால் சுமார் 20 நிமிடங்கள் போராடி மீட்டனர். இதனை அங்கிருந்த சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.