பெண்களுக்கு என பிரத்யேகமாக புதிய சிறு சேமிப்பு திட்டம் பட்ஜெட்டில் அறிமுகம்

 
tn

​​​​​​​2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது, இது அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட்; விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவரும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக உலகமே அங்கீகரித்துள்ளது. உலகமே பாராட்டுவதால் தலைநிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன் என்றார் 

  • 47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயம் நோக்கி வழிநடத்துவோம், இயற்கை உரங்கள் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும்
  • பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது
  • பான் கார்டு இனி அரசுத் துறை கொள்கைகளில் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படும்
  • நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூபாய் 10,000 கோடி நிதி ஒதுக்கீடு
  • பெண்களுக்கு என பிரத்யேகமாக புதிய சிறு சேமிப்பு திட்டம் பட்ஜெட்டில் அறிமுகம் -  2 ஆண்டுகளில் அதிகப்பட்சமாக 2 லட்சம் வரை சேமிக்கலாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 7.5% வட்டியில் இந்த புதிய திட்டம் அறிமுகம்

tn

  • கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு
  • மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ6,000 கோடி
  • உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
  • கால்நடை வளர்ப்பு, மீன் வளத்துறைக்கு ரூ20 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பத்திற்காக 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்

tn

  • தோட்டக்கலை துறைக்கு ₹2,200 கோடி நிதி ஒதுக்கீடு
  • தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம்
  • "விவசாயத்துறையில் புதிய ஸ்டார்ட் அப்கள் உருவாக்க ஊக்குவிக்கப்படும்.
  • வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு
  • குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்
  • 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்
  • டிஜிட்டல் பண பரிவர்த்தனை 76% அதிகரித்துள்ளது;
  • தேசிய தரவு நிர்வாகக் கொள்கையின் கீழ் KYC செயல்முறை எளிதாக்கப்படும்

tn

  • பசுமை எரிசக்தி 
  • சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவினரை மேம்படுத்துவதற்காக ரூ. 9000 கோடி ஒதுக்கீடு
  • உற்பத்திக்கு தொடர்ந்து முன்னுரிமை
  • ஐசிஎம்ஆர் நிலையங்களை தனியாரும் பயன்படுத்தலாம்
  • 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம்
  • பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு