8வது நாளாக சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள் விலை..

 
தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்..

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 8வது நாளாக சரிவை சந்தித்துள்ளன.

அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழும நிறுவனங்கள் மீது அண்மையில் மோசடி குற்றச்சாட்டுகளை  வெளியிட்டது.  இந்த ஆய்வறிக்கையால் அதானி  குழும சாம்ராஜ்ஜியமே  ஆட்டம் கண்டுள்ளது.   முறைகேடு புகார்கள் வெளியான நாள் முதல் பங்குச் சந்தைகளில் அதானி நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்து  வருகின்றன. அதன்படி இன்று 8வது நாளாக பங்குகளின் மதிப்பு சரிவுடனேயே வர்த்தகமாகி வருகிறது. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 6.52% அதாவது ரூ.103 குறைந்து ரூ. 1,480 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதானி என்டர்பிரைசஸ்

அதானி பவர் நிறுவன பங்கு விலை 5% அதாவது ரூ. 9 .60 குறைந்து  ரூ. 180  வீழ்ச்சி அடைந்துள்ளது.  அதானி  ட்ரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்குகளை 10% அதாவது 140 ரூபாய் குறைந்து ரூ.1,761 ரூபாயாக வர்த்தகம் ஆகிறது.  அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை 5 சதவிகிதம் அதாவது ரூ. 46 ரூபாய் குறைந்து ரூ.  887 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது..  அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்குகளை 5 சதவிகிதம் அதாவது 81 ரூபாய் குறைந்து ஒரு பங்கின் விலை ரூ. 1,544 ஆக வர்த்தகம் ஆகிறது. அதானி வில்மர்  நிறுவனத்தின் பங்கு சதவிகிதம் 5% குறைந்து அதாவது 20  ரூபாய் குறைந்து ரூ. 380 ஆக  வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு  விலை மட்டும்  1%  அதாவது ரூ. 5.8  அதிகரித்து  , ஒரு பங்கின் விலை ரூ. 504 ஆக உயர்ந்து வர்த்தகம் ஆகிறது.