"பிடிபட்ட 3,000 கிலோ ஹெராயின்.... இனி பாகிஸ்தான், ஆப்கான் சரக்குகளுக்கு நோ என்ட்ரி" - அதானியின் அதிரடி முடிவு!

 
adani

உலகளவில் போதைப்பொருளான ஹெராயினை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடாக ஆப்கானிஸ்தான் பார்க்கப்படுகிறது. அதற்கு நேரெதிராக அங்கு தயாராகக் கூடிய ஹெராயினை அதிகளவில் நுகரக்கூடிய நாடாக இந்தியா இருக்கிறது. தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியமைத்துள்ளனர். அவர்களுடைய முந்தைய ஆட்சிக் காலத்தில் ஓபியம் அதாவது அபின் பிஸினஸ் கொடிகட்டி பறந்தது. அபினிலிருந்து வரும் ஹெராயின் பவுடர் தான் இந்தியாவில் பேமஸ். வளம் கொழிக்கும் வியாபாரம். 

Adani's Valuation Binge - BusinessToday

இந்தியாவில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதில் இரண்டே நோக்கம் தான். அபின்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்தி தங்களின் வணிகத்தைப் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இந்தியா மீதே தாக்குதலுக்கு தயாராக வேண்டும். மற்றொரு நோக்கம் இந்தியாவிலுள்ள இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கி நாட்டை வலுவிலக்கச் செய்ய வேண்டும். இது முந்தைய ஆப்கான் ஜனநாயக ஆட்சிக் காலத்தில் இருந்தாலும் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது.  தற்போது தலிபான்களின் ராஜ்ஜியம் அமைந்துள்ளதால் தரை, வான், கடல் என மூன்று வழிகளிலும் ஹெராயின் கடத்தல் ஆட்டத்தைத் துவக்கியுள்ளனர். 

NCB deflecting attention from real issue which is Mundra port', Mumbai  cruise ship raid is a mere diversion: Congress

இதற்கு ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் உடந்தை. ஆப்கானிஸ்தானிலிருந்து நேரடியாக பாதை இல்லாததால் பாகிஸ்தான் வழியாகவே இந்தியாவிற்கு ஹெராயின் கடத்தப்படுகிறது. வட இந்தியாவிற்கு பாகிஸ்தான்-இந்தியா எல்லைப் பகுதியில் இருக்கும் பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களின் தரைவழியாக ஹெராயின் கடத்தப்படுகிறது. அதேபோல துறைமுகங்கள் வழியாக கப்பல்கள் மூலம் குஜராத், மும்பை, கொச்சி, தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களுக்கு ஹெராயின் வந்துசேர்கிறது.  அந்த வகையில் சமீபத்தில் குஜராத்திலுள்ள முந்த்ரா துறைமுகத்தில் 9 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 

Gujarat: Heroin worth Rs 9,000 crore seized from Mundra Port - India News

ஆப்கானிஸ்தானிலிருந்து முகப்பவுடர் ஏற்றிவரும் கன்டெய்னரில் 2 ஆயிரத்து 988 கிலோ ஹெராயின் கடத்திவரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள ஆஷி டிரேடிங் நிறுவனத்திற்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சரக்குகளோடு ஹெராயின் கடத்திவரப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கணவன், மனைவி கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் முந்த்ரா துறைமுகம் தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்தச் சம்பவத்தால் கடும் விமர்சனத்துக்குள்ளானார் அதானி. இதையடுத்து வரும் நவம்பர் 15ஆம் தேதியிலிருந்து தங்களது துறைமுக முனையங்களில் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் சரக்குகளைக் கையாளப் போவதில்லை என அதானி துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.