எல்.1 புள்ளிக்கு வெற்றிகரமாக சென்றடைந்தது ஆதித்யா எல்.1 விண்கலம்!

 
aditya L1 aditya L1

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக எல்-1 புள்ளியை சென்றடைந்துள்ளதாக இஸ்ரோ விஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஏவியது.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 02ம் தேதி  பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம்  ஆதித்யா விண்கல விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்பட்டது. 

aditya l1

இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக எல்-1 புள்ளியை சென்றடைந்துள்ளதாக இஸ்ரோ விஞானிகள் தெரிவித்துள்ளனர். எல்-1 என்ற இடத்திலிருந்து எவ்வித குறிக்கீடும் இன்றி சூரியனை ஆராய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆதித்யா விண்கலம் ஆய்வு செய்யும். ஆதித்யா விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.