அகமதாபாத் விமான விபத்து- விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்

 
அகமதாபாத் விமான விபத்து- விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம் அகமதாபாத் விமான விபத்து- விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்

கடந்த மாதம் 12ஆம் தேதி நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்தில் 260பேர் உயிரிழந்தது தொடர்பான, 15 பக்க முதற்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வு பிரிவு நேற்று வெளியிட்டது. விமானம் புறப்பட்டசில நொடிகளில்விமான இயந்திரங்களுக்கான எரிபொருள் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் கடந்த மாதம் 12ம் தேதி விபத்தில் சிக்கியது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பி.ஜே.மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியது. விமானத்தில் வெள்ளை எரிபொருள் முழுவதுமாக இருப்பு இருந்த நிலையில் விழுந்த உடனேயே வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயனித்த இரண்டு விமானிகள், பத்து விமான பணியாளர்கள் உட்பட 242 பேரில் 241 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர்பிழைத்துள்ளார். விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்து தொடர்பான விசாரணையின் முதற்கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, விமானம் புறப்பட்ட சில நொடிகளில் திடீரென 2 என்ஜின்களும் அடுத்தடுத்து செயலிழந்தன. என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டதே காரணம். விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே ஒரு விமானி மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள்? என கேட்டுள்ளார். தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் அளித்துள்ளார். 2 என்ஜின்களும் செயலிழக்கும்போது RAT என்ற அமைப்பு மூலம் விமானத்தை அவசரமாக இயக்க முயற்சி நடந்துள்ளது. எரிபொருள் செல்லும் 2 வால்வுகளும் மீண்டும் செயல்பட தொடங்கினாலும் ஒரு என்ஜின் மட்டுமே ஓட தொடங்கியுள்ளது. ஆனாலும் விமானம் மேல் எழும்ப முடியாமல் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது. மேலும் கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முற்றிலும் உருக்குலைய காரணம். என்றும் 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 “கடைசி நிமிட கதறல் கேட்டிருந்தால் மரணமும் அழுதிருக்கும்” - விமான விபத்து குறித்து வைரமுத்து..!!

இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என போயிங் நிறுவனம் கூறியுள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள், எங்கள் வாடிக்கையாளருக்கும், அதிகாரிகளுக்கும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறோம் என்றும் போயிங் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.