ஓட்டலாக மாறிய ஏர்பஸ்-320ரக விமானம்

 
air

விமானத்தில் பயணித்துக்கொண்டே சாப்பிடுவது போன்ற உணர்வினை தருவதற்காக  நிஜ விமானத்தை வாங்கி அதை ஓட்டலாக மாற்றியிருக்கிறார்கள் குஜராத் மாநிலம் வதோதராவில்.  

a

பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ்-320ரக விமானம் ஒன்றினை வாங்கியவர்கள் விமானத்தின் ஒவ்வொரு பாகத்தினையும் வதோதராவுக்கு கொண்டு சென்று விமான ஓட்டலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ar

இந்த ஓட்டல்  வெளிப்புறத்திற்கு மட்டுமல்ல, உட்புறத்திலும் விமானம் போல்தான் உள்ளது.   விமானத்தில் பயணித்துக்கொண்டே  உணவருந்துவது போன்ற உணர்வினை தருவதற்காக ஓட்டல் சர்வர்களும், ஊழியர்களும் விமான பணிப்பெண் போல இருக்கிறார்கள்.

a

பில் போடும் இடமும் விமான பைலட் அறை போன்றே இருக்கின்றது.    பில் போடுபவர்களும் விமான ஓட்டிகள் போலவே இருக்கிறார்கள். 

aaaa

ஒரே நேரத்தில் 106 பேர் வரைக்கும் இந்த விமான ஓட்டலில் அமர்ந்து சாப்பிடலாம்.   இந்த ஓட்டலில் சைனீஸ், பஞ்சாபி, காண்டினெண்டல், தாய், இத்தாலியன் உள்ளிட்டபல்வேறு வகையான் உணவுகள் கிடைக்கின்றன. கடந்த 25ம் தேதி முதல் இந்த விமானம் இயங்கி வருகிறது.

இந்த விமான ஓட்டல் குஜராத் மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

arr

முன்னதாக கிழக்கு ஜெர்மனில்   சூப்பர் போஷ் விமானம் ஹோட்டலாக  மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

rrr