இந்தியாவின் மோதல் தீவிரவாதிகள் உடன் மட்டுமே; பாகிஸ்தான் இராணுவத்துடன் அல்ல- ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி
போர் பதற்றத்திற்கு பிறகு 2வது முறையாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்தியா தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்போர் பதற்றத்திற்கு பிறகு 2வது முறையாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்தியா தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, “பாகிஸ்தான் ஏவிய சீனாவின் அதிநவீன போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான் தாக்குதலில் நமக்கு சிறிய அளவு பாதிப்பு, பாகிஸ்தானுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. ரஹீம்யார் கான் விமானப்படை தளத்தில் இந்தியா நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான் என்பதை மீண்டும் தெளிவுப்படுத்தினோம். பாகிஸ்தான் ராணுவத்துடன் மோதல் இல்லை என்பதையும் திட்டவட்டமாக வலியுறுத்தினோம். பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக களம் இறங்கியதால், பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பயங்கரவாதிகளின் பிரச்சனையை பாகிஸ்தான் ராணுவம் தங்களுடைய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்திய மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி. இந்திய விமானப்படை தளங்களும் பாதுகாப்பாக உள்ளன. வடக்கு அரேபிய கடலில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் கேரியர் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது
இந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய, நீண்ட தூர ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தகர்த்து அழித்தது. அந்நாட்டு ராணுவத்தின் அத்துமீறலுக்கு பதிலளிக்கும் விதமாக கராச்சி, லாகூர் தளங்களில் நாம் தாக்குதல் நடத்தினோம். வான் பாதுகாப்பு அமைப்பை தாக்கி அழித்தோம். நமது தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு எதிரானது. ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்கது. சீனாவின் யீஹா மற்றும் சொன்கர் ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டு, இந்திய தரப்பில் சேதங்களை வெகுவாக குறைத்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையும், சர்வதேச எல்லையையும் தாண்டாமல் இந்தியா தாக்குதலை நடத்தியது. பயங்கரவாதிகளுக்கு மட்டுமே இந்தியா பதிலடி கொடுக்க முயற்சித்தது.” என்றார்.


