ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவகாரத்து? அம்பானி வீட்டு திருமணத்திற்கு தனித்தனியே விசிட்!!
அம்பானி வீட்டு திருமண விழாவுக்கு அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதி தனி தனியே வந்தது பேசும் பொருளாகியுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யாராய்க்கும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யாராய் தொடர்ந்து திரைப்படங்களின் நடித்து வருகிறார். இந்த சூழலில் ஐஸ்வர்யாராய் - அபிஷேக் பச்சன் தம்பதி விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில் தொழிலதிபர் அம்பானி மகன் திருமண விழாவில் உலகம் எங்கிலும் இருந்து ஏராளமான தலைவர்களும் , நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். அதன்படி திருமண நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இருவரும் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அபிஷேக் பச்சன் தனது தந்தை அமிதாபச்சன், தாய் ஜெயா பச்சன் ஆகியோருடன் இணைந்து திருமணத்திற்கு வருகை புரிந்திருந்தார். பின்னர் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் திருமணத்திற்கு வந்தார். இவர்கள் போட்டோ கூட தனித்தனியாகவே எடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐஸ்வர்யாராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்தி மீண்டும் பேசும் பொருளாக மாறி உள்ளது.


