பனாமா ஆவண விவகாரம்: நடிகை ஐஸ்வர்யாராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் ...

 
ஐஸ்வர்யா ராய்

பனமா பேப்பர்ஸ் வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அளவில் வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணம் பதுக்குபவர்கள் குறித்த ரகசிய புலனாய்வு ஆவணங்கள் அவ்வப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.  அந்தவகையில் கடந்த 2016ம் ஆண்டு ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் முக்கிய ஆவணங்கள் வெளியாகி, உலக நாடுகளின் பெரும் செல்வந்தர்கள், பிரபலங்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.  பனாமா பேப்பர்சில் இந்தியாவை சேர்ந்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

ஐஸ்வர்யா ராய்

 அதோடு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் அந்த ஆவணத்தில் சிக்கி பதவி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.  இதேபோல் கடந்த அக்டோபர் மாதம்  ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற புலனாய்வு அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில்  அனில் அம்பானி, சச்சின் டெண்டுல்கர் என இந்தியாவின் 300க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முறைகேடாக முதலீடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூட் மாறும் நடிகை ஐஸ்வர்யா ராய்! பணத்தை பெருக்க பலே ஐடியா!

இந்நிலையில் பனமா பேப்பர்ஸ் வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஐஸ்வர்யா ராய் ஆஜராக உள்ளதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளன.  சட்டவிரோத பணபரிவர்த்தனை புகாரில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கி வைத்த குற்றச்சாட்டின் பேரில் ஐஸ்வர்யா ராயிடம் 15 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறை   திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.