எல்லை பாதுகாப்பு படையுடன் அமித்ஷா ஆலோசனை!

 
amit shah amit shah

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லை பாதுகாப்பு படையுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில்,  இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லை பாதுகாப்பு படையுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எல்லை பாதுகாப்பு படை இயக்குநர், சிஐஎஸ்எஃப், இயக்குநருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். எல்லையில் நிலவும் சூழல், விமான நிலைய முன்னேற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.