’என் மண் என் மக்கள்’ நடைபயணத்தால் தயாநிதி மாறனுக்கு பயம் - அமித் ஷா பதிலடி

 
Amit shah

தயாநிதி மாறனுக்கு பாராளுமன்றம் பற்றிய கவலை இல்லை, அவருடைய கவலை எல்லாம் "என் மண் என் மக்கள்" நடைபயணம் உண்டான பயத்தால் அவர் கூக்குரல் இடுகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார். 

நேற்று மக்களவையில் பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன், மணிப்பூர் விவகாரம் பற்றி பேச வேண்டும், நாங்கள் பேசும்போது பிரதமர் இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. கடந்த 25 ஆண்டுகளாக டில்லியை உங்களால் ஆட்சி செய்ய முடியவில்லை. அந்த ஏக்கம் உங்களிடம் தெரிகிறது. சிபிஐ, அமலாக்கத்துறையை கூட்டணி கட்சிகளாக வைத்துள்ளீர்கள். ஆம் ஆத்மி அரசு மக்களால் தேர்வான அரசு. அவர்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது.  பாஜக வெல்ல முடியாத இடங்களுக்கு எல்லாம் சிபிஐ, அமலாக்கத்துறையை அனுப்பி, அந்த கட்சியை உடைத்து, உறுப்பினர்களை தூக்கி வருகிறீர்கள். அதுவரை அவர்கள் ஊழல்வாதிகள், ஆனால் உங்களுடன் இணைந்துவிட்டால் அவர்கள் புனிதர்கள். இவ்வாறு கூறினார். 


இந்த நிலையில், தயாநிதி மாறனின் குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்து பேசிய காணொலியை தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே! நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உரத்த குரலில் பேசியதை நான் கேட்டேன். அவருக்கு பாராளுமன்றம் பற்றிய கவலை இல்லை. அவருடைய கவலை எல்லாம் "என் மண் என் மக்கள்" நடைபயணம் உண்டான பயத்தால் அவர் கூக்குரல் இடுகிறார். இவ்வாறு அமித் ஷா பேசியுள்ளார்.