புறப்பட்ட 3 நிமிடங்களில் நொறுங்கிய விமானம்... அகமதாபாத் விரைகிறார் அமைச்சர் அமித்ஷா!
குஜராத் விமான விபத்து தொடர்பாக ஆய்வுசெய்ய உள்துறை அமைச்சர், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோரை அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 குழந்தைகள் உட்பட 242 பேர் உடல் கருகி பலியாகின. விமானம் புறப்பட்ட 3 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. 3,000 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமான விபத்துக்குள்ளான பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், சென்னையில் இருந்து 182 பயணிகளுடன் அகமதாபாத் சென்ற விமானம் அங்கே தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது.
🔴 #BREAKING | அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற விமானம், விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளானது
— Spark Media (@SparkMedia_TN) June 12, 2025
விமானத்தில் 242 பேர் பயணம் செய்ததாக முதற்கட்ட தகவல் pic.twitter.com/ut6nE9sPwV
குஜராத் விமான விபத்து தொடர்பாக ஆய்வுசெய்ய உள்துறை அமைச்சர், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோரை அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து குஜ்ராத் மாநில முதல்வர் பூபேந்திர படேலை தொடர்புகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும் குஜராத் விமான விபத்து தொடர்பாக ஆய்வுசெய்ய உள்துறை அமைச்சர், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் அகமதாபாத் விரைந்துள்ளனர்.


