கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது- அமித்ஷா

 
அமித்ஷா

நிலச்சரிவு ஏற்படும் என கேரள அரசை  மத்திய அரசு முன்கூட்டியே எச்சரித்தது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவு : தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதி - செல்வப்பெருந்தகை அறிவிப்பு.. 

மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “கனமழை குறித்து கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை வழங்கியது. அதாவது நிலச்சரிவு குறித்து 7 நாட்களுக்கு முன்பாக ஜூலை 23ம் தேதியே கேரளா அரசுக்கு வார்னிங் வழங்கப்பட்டது. அதன்பிறகு ஜூலை 24, 25 ஆகிய தேதிகளிலும் அடுத்தடுத்து வார்னிங் செய்யப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது? தயவு செய்து மத்திய அரசு கொடுக்கும் எச்சரிக்கையை மாநில அரசுகள் படித்துப் பார்க்க வேண்டும்.  பேரிடர் ஏற்படும் எனத் தெரிந்து 9 தேசிய பேரிடர் மீட்புக் குழுவை கேரளாவுக்கு அனுப்பிவைத்தோம். எங்கள் பேச்சைக் கேளுங்கள் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தோம்.

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்- அமித்ஷா

குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அது குறித்து 3 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை வழங்கினோம். எச்சரிக்கையை குஜராத் அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டதால் ஒரு பசு கூட இறக்கவில்லை. மழை, வெள்ளம், புயல், வெப்ப அலை என அனைத்துக்கும் மத்திய அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது. இயற்கைப் பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்பு சரியாக செயல்பட்டு வருகிறது. எவ்வித அரசியல் வேறுபாடும் இன்றி கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு துணை நிற்கிறது” என்றார்.