கேரளாவை மிரட்டும் அமீபா மூளைக்காய்ச்சல்- மேலும் ஒருவர் பலி
Sep 7, 2025, 10:30 IST1757221255000
கேரளாவில் இந்தாண்டு இதுவரை அமீபா மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 48 பேரில் 12 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலத்தில் அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து தற்போது 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோழிக்கோடு மாவட்டத்தில் அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்த 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 மாதக் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் அமீபா
மூளைக்காய்ச்சலால் கடந்த 8 நாட்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமீபிக் அன்செபாலிடிஸ் வைரஸ் காரணமாக அமீபா நோய் பரவுகிறது.
மூளையை தின்னும் அமீபா பாதிப்பு இதுவரை தமிழ்நாட்டில் தென்படவில்லை, இதுவரை எந்த புகாரும் வரவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.


