8 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொலை! திருப்பதியில் பரபரப்பு

 
rape rape

திருப்பதி அருகே 8 வயது சிறுமி கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rape

 
திருப்பதி மாவட்டம் தொரவாரிசத்திரம் மண்டலம் நெலபல்லி வனப்பகுதியில் 8 வயது சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரைச் சேர்ந்த 40 குடும்பங்கள் நெலபல்லி அருகே உள்ள ஒரு அரிசி ஆலையில் கூலி வேலை செய்து அதேபகுதியில் வசித்து வருகின்றனர். அவர்களுடன் லாலு என்பவரின் எட்டு வயது மகளும் தங்கி இருந்தார். இந்நிலையில்  அவர்களுடன் பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் சிறுமியை அழைத்துச் செல்வதைக் அந்த பகுதி மக்கள் பார்த்தனர். அதன்பிறகு அந்த இளைஞரையும் சிறுமியை காணவில்லை. 

சிறிது நேரம் கழித்து அந்த பகுதியில் தேடியபோது அரிசி ஆலை அருகே உள்ள வனப்பகுதியில் சிறுமியின் சடலம் இருப்பதைக் கண்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நாயுடுப்பேட்டை டிஎஸ்பி ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.  சிறுமியின் உடல் நாயுடுபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தப்பி ஓடிய இளைஞரை தேடி வருகின்றனர். சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றாரா அல்லது கொலை செய்தாரா என்பது உடற்கூறு ஆய்வுக்கு பின் விசாரணையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.