நோயாளியின் கடைசி ஆசை - 2870 கிமீ தொலைவை 60 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!!

 
tn

கொல்கத்தாவில் இருந்து ராய்கஞ்ச் வரை 2870 கிலோ மீட்டர் தொலைவை  60 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் 

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள மைநாகப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த போதனி பஹான் என்ற 60 வயதான நபருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக அவர் படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார்.  சொந்த ஊரான மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச்  நகருக்கு செல்வது தான் தனது கடைசி ஆசை என்று அவர் கூறிவந்துள்ளார்.  மேற்கு வங்கத்திற்கு அவரை விமானத்தில் அழைத்துச் செல்ல அதிக செலவாகும் என்பதால் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.  கருநாகப்பள்ளியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருண் என்ற 28 வயது இளைஞர் ஆம்புலன்ஸை ஒட்டி சென்றுள்ளார்.

rg

 கடந்த  மாதம் 22ஆம் தேதி காலை 7 மணி அளவில் மைநாகப்பள்ளியில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் ஏப்ரல் 24ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் ராய்கஞ்ச் சென்றடைந்தது. அதாவது 2870 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 60 மணி நேரத்தில் கடந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 

tn

எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸை நிறுத்தும் நேரத்தில் போதினி பஹான் உணவு உண்டுள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருண் சிற்றுண்டி மட்டுமே எடுத்துக் கொண்ட நிலையில் ஒருநாள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் ஏப்ரல் 26ம் தேதி கேரளாவை வந்தடைந்துள்ளார். நோயாளி ஒருவரின் இறுதி ஆசைக்காக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருண்  செய்த இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.