எனக்கு துணை முதல்வர் பதவி, ஆட்சி அதிகாரம் முக்கியமல்ல; மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்- பவன் கல்யாண்

 
பவன் கல்யாண் பவன் கல்யாண்

மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

பிதாபுரம் எம்.எல்.ஏ பவர் ஸ்டார் பவன் கல்யாண்! ரசிகர்கள் கொண்டாட்டம் | fans  rejoice as power star pawan kalyan set to enter andhra assembly from  pithapuram | HerZindagi Tamil

ஆந்திர மாநில துணை முதல்வரும் பஞ்சாயத்து ராஜ், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பவன் கல்யாண் தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வைத்தார். அப்பொழுது நடைபெற்ற விழாவில் பேசிய துணை முதல்வர் பவன் கல்யாண், “மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பெற முடியும். எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது. போலீசார் குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ளனர். ஜாதி, மதம் குற்றவாளிகளுக்கு கிடையாது. தவறு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும். யாராக இருந்தாலும் உறவினர் என்றும் ரத்த பந்தம் என கூறி வந்தால் தவறு செய்திருந்தால் அவர்களையும் சேர்த்து அடித்து உதையுங்கள். டிஜிபி, எஸ் பி, கலெக்டர்களுக்கு கூறுகிறேன் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதிகாரிகள் மத்தியில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. 

உள்துறை அமைச்சராக உள்ள அனிதாவும் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாமல் அமைதியாக உள்ளார். நான் உள்துறை அமைச்சராக பதவி ஏற்றால் வேறு மாதிரி இருக்கும். என்னை அந்த நிலைக்கு கொண்டு வர வேண்டாம். தேவைப்பட்டால் உள்துறை அமைச்சர் பொறுப்பையும் நானே ஏற்பேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும். சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிராக செயல்பட்டால்  எவ்வாறு தண்டனை வழங்கப்படுகிறது அது போன்று அளித்தால் என்ன தவறு உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது இதே போலீசார் என்னை கைது செய்ய வந்தனர். ஆனால் இப்பொழுது ஏன் பணி செய்யவில்லை என்று தெரியவில்லை. அதே போலீசாரே உள்ளீர்கள். எனக்கு துணை முதல்வர், பதவி, ஆட்சி அதிகாரம் முக்கியமல்ல, எப்பொழுதும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே முக்கியம்.  

Pawan kalyan: ``சனாதன தர்மத்தைப் பாதுகாக்க புதிய குழு ஒன்று  தொடங்கப்படும்...'' -பவன் கல்யாண் | Andhra Deputy CM Pawan Kalyan about  sanatana dharma - Vikatan

சமூக நலத்துறை விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு அங்குள்ள அதிகாரிகளால் தொடர்ந்து பாலியல் சீண்டல் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளது. ஏன் ஒரு முறையாவது எம்எல்ஏக்கள் சென்று பார்த்தீர்களா?  ஜனசேனா கட்சியினரும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட்டோம் என்று அமைதியாக இருக்கக் கூடாது. எம்எல்ஏக்கள் அனைவரும் மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாஜக, தெலுங்கு தேசம் ஜனசேனா கூட்டணியை யாரும் உடைக்க முடியாது. தனிப்பட்ட ஒருவர் செய்யும் தவறை ஜாதியாலோ மதத்தாலோ இணைக்க வேண்டாம். தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும்” என போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தார்.