பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை..

 
Anil Ambani

பங்குச் சந்தையில் வர்த்தம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள்  தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு  5 ஆண்டுகள் தடை விதித்தும்,  25 கோடி ரூபாய் அபராதமும் விதித்தும் செபி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  வாடிக்கையாளர்களின் நிதியை  தவறாக பயன்படுத்தியதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து  அனில் அம்பானி  மீது செபி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்,  பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும் இயக்குனராகவோ,  நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 NSE

அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில்  reliance ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கும் ரூ. 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன பங்குகளுக்கு 6 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.  ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன முன்னாள் நிர்வாகிகள் அமித் பாப்னா உள்பட  4 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. 

அமித் பாப்னாவுக்கு   27 கோடி ரூபாயும்,  ரவீந்திர சுதால்கருக்கு 26 கோடி ரூபாயும்,  பிங்கேஸ் ஷாவுக்கு 21 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.  ரிலையன்ஸ் யூனிகான் என்டர்பிரைசஸ்,  ரிலையன்ஸ் எக்ஸ்சேஞ்ச் நெக்ஸ்ட்க்கு ரூ. 25 கோடி  அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் ரிலையன்ஸ் கிளீன் ஜென்,  ரிலையன்ஸ் பிராட்காஸ்ட் நியூஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும் ரூ. 25 கோடி  அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.  ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ்,  ரிலையன்ஸ் பிக் என்டர்டைன்மென்ட்க்கும் ரூ. 25 கோடி  அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது