ஒடிசாவில் மற்றொரு சரக்கு ரயிலும் தடம் புரண்டு விபத்து

 
tn

ஒடிசா மாநிலத்தில் மற்றொரு சரக்கு ரயிலும் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tn

கடந்த 2 ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்,  ஒடிசா மாநிலம் பாலச்சோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது . அப்போது பாஹாநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது.  ரயிலின் பெட்டிகள் அருகே இந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.  அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு கிடந்த பெங்களூர் ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் ஏற்கனவே விபத்துக்குள்ளான கோரமண்டல்  ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி தடம் புரண்டன.  இந்த கோர விபத்தில் சுமார் 275 பேர் பலியாகியுள்ளனர்.  900ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

tn

இந்நிலையில் ஒடிசாவின் பார்கார் பகுதியில் சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் ஏற்கனவே 3 ரயில்கள் விபத்தில் சிக்கி , 250ற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் மற்றொரு ரயிலும் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.