ஆந்திராவில் மற்றொரு பயணிகள் பேருந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

 
ஆந்திராவில் மற்றொரு பயணிகள் பேருந்து  தீ பிடித்து  எரிந்ததால் பரபரப்பு ஆந்திராவில் மற்றொரு பயணிகள் பேருந்து  தீ பிடித்து  எரிந்ததால் பரபரப்பு

ஆந்திராவில் மற்றொரு பயணிகள் பேருந்து  தீ பிடித்து  எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திலிருந்து ஜெய்ப்பூருக்குச் ஒடிசா மாநில ஆர்.டி.சி. பஸ் இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்  ஆந்திராவில் பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்தின் பச்சிபெண்டா மண்டலத்தில் உள்ள ரோட்டவலசா வழியாக சென்றபோது பஸ்சில் திடிரென தீ பிடித்தது. உடனடியாக டிரைவர் பயணிகளை எச்சரிக்கை செய்து பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். சில நிமிடத்தில் தீ விபத்தில் பஸ் முற்றிலுமாக எரிந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

சமீபத்தில்  தெலுங்கானாவின் செவெல்லாவில் ஒரு டிப்பர் லாரி பேருந்து மீது மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். முன்னதாக, கர்னூலில் ஒரு பேருந்து  தீ பிடித்ததில்  20 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.