ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது!
Sep 9, 2023, 07:50 IST1694226010759
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டார்
2019 சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது ரூபாய் 317 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அவரை கைது செய்ய போலீசார் சென்றனர் .
சந்திரபாபு நாயுடுவிற்கு பாதுகாப்பு கொடுத்து வரும் சிறப்பு பாதுகாப்பு படையினர் அதிகாலை 5.30 மணி வரை அவரை யாரும் நெருங்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். இதையடுத்து இன்று 5.30 மணிக்கு அவர் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார. இதன் காரணமாக ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.