அதிரடி திருப்பம்! பஞ்சாப் முதலமைச்சர் ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்?
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில், பஞ்சாப் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 02ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், தொடக்கம் முதலே டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகித்தது. இறுதிகட்ட முடிவின் படி பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 27 வருடங்களுக்கு பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்ததை அடுத்து டெல்லி முதல்வர் அதிஷி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், பஞ்சாப் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


