#BREAKING: மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம்

 
Arjun Ram Arjun Ram

புதிய மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன்ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டு என தொடர்ந்து இரண்டு முறை பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது. 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். பாஜக ஆட்சி அடுத்த ஆண்டுடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இதனிடையே பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் கிரண் ரிஜூஜூ. இவர் சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்த நிலையில், அவரது துறை மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன்ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கிரண் ரிஜூஜூ மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.