சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை

 
tn tn

நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் கைதான அனுஜ் தாபன் தற்கொலை செய்துகொண்டார்.

tn

இந்நிலையில் நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் கைதான அனுஜ் தாபன் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மும்பை குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக் காவலில் இருந்த கைதி அனுஜ் தாபன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

death

மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே கடந்த 14ஆம் தேதி துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இந்த வழக்கு தொடர்பாக அனுஜ் தபான் என்பவரை மும்பை காவல் துறையினர் கைது செய்தனர்.  கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பஞ்சாபில் இருந்து அனுஜ் தபான்  கைது செய்யப்பட்டு மும்பை கொண்டுவரப்பட்டார். 
இந்த வழக்கில் விக்கி குப்தா  , சாகர் பால் , சோனு பிஷினோய் ,   லாரன்ஸ்  பிஷினோய் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.