நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் - கைதானவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

 
Parliament Attack

நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி விசப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த புதன் கிழமை பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இருவரையும் பிடித்து நாடாளுமன்ற காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் பட்டாசுகளை வீசியது தெரியவந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம் தொடர்பான விசாரணை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேர் மீதும் உ.பா.சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி விசப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கைது செய்யபட்ட 4 பேரிடம் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில், தாக்குதல் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 4 பேரும் உடலை தீ வைத்து எரித்து கொள்வது, சில துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது, வண்ண புகை குண்டுகளை வெடிக்க செய்து கவனத்தை ஈர்ப்பது என மூன்று திட்டங்களை தீட்டிய நிலையில்,  முதல் 2 திட்டங்களும் கைவிடப்பட்டதால், 3வது திட்டம் செயல்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.